இன்றைய நவீன உலகில் நாம் உடல்,உள  ஆரோக்கியத்துடன் கூடிய ஓர் மனிதனாக உருவாகுவதில் முன்னிலை பெறுவது விளையாட்டுக்களே.

சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் குழுக்களாக இணைந்து வெற்றி,தோல்விகளை சமமாக மதித்து விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் கூடிய ஓர் சிறந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப வித்திடுவது விளையாட்டுப்போட்டிகளே.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கோட்டைக்கல்லாறு கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ்  குளக்கரையை அண்டி அமைந்துள்ளது எமது பொது விளையாட்டு மைதானம். 

இங்கு  எமது இளைஞர்களால் உரிய பயிற்சிகளையோ, எமது பாடசாலைகளினால் சிறந்த முறையில் இல்ல விளையாட்டுப்போட்டிகளையோ முன்னெடுக்க முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை காணப்படுகின்றது. 

எமது கிராமத்தவர்களினதும்  ஒரு சில அரசியல் வாதிகளின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலமும் பெறப்பட்ட உதவிகளைக் கொண்டு எம் இளைஞர்களின் அயராத முயற்சியினூடாக வருடத்தின் சில மாதங்களாவது தங்கள் விளையாட்டுத்திறனை  ஓரளவேனும் விருத்திசெய்யக்  கூடிய வகையில்   இம் மைதானம்  சற்று புனரமைப்பு செய்யப்பட்டது   இருந்தும் அது கிராமத்தின் தாழ்ந்த பகுதி என்பதால் மாரிகாலத்தில் பயன்படுத்த உகந்ததாக அமையவில்லை.


அதனை செப்பனிடும் பணி போதிய வளப் பற்றாக்குறையால் இடைநடுவே ஸ்தம்பித்துவிட்டது.


எமது கிராமத்திலுள்ள 3 பாடசாலைகளை சேர்ந்த 1300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், 4  முன் பள்ளிகளைசேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட சிறார்கள், 5 விளையாடுக்கழகங்களை சேர்ந்த 400 இற்கும் மேற்பட்ட  இளைஞர் மற்றும் யுவதிகளின் விளையாட்டுத்திறன்  மேம்பாடு இம் மைதானத்தை நம்பியே காணப்படுகின்றது.

எனது மண்ணின் உறவுகளே உங்களால் முடியும் . உங்களால் இயன்ற பங்களிப்பை  வழங்குங்கள். "எனது மண்ணிற்கு நான் உதவ வேண்டும் என்று முன் வாருங்கள்"

புலம்பேர் உறவுகளே இங்குள்ள உங்கள் குடும்பத்தோடோ அல்லது எம்மோடு இணைந்தோ உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
குறைந்தது ஒரு லோட்  மணலாவது உங்கள் பங்களிப்பாக இருக்கட்டும்.

இன் நிலப்பரப்பு விளையாட்டு மைதானமாக அமைவதற்கு ஏதுவான காரணிகளாக

*அதன் சுற்றளவு அண்ணளவாக 450மீட்டர்கள் (google map துணையுடன் அளக்கப்பட்டது)
இது எமது கிராமத்தில் காணப்படும் பாரிய வெற்று நிலப்பரப்பாகும் மற்றும் எதிர்காலத்தில் இதனை விஸ்தீரணம் செய்ய சாதகமான சூழ்நிலைகள் காணப்படுகின்றது.

*கிராமத்தின் மத்தியில் அமையபேற்றது.

இதனால் எமது பாடசாலைகளுக்கும் இம் மைதானத்திற்குமான தூரம் குறைவு மற்றும் இயற்கை சூழலுடன் ஒன்றிக்காணப்படுகின்றது

*ஒப்பீட்டளவில் வேறு தீர்வைவிட இன் நிலப்பரப்பை செப்பனிட செலவாகும் பொருட் செலவு குறைவு.
   
இதனடிப்படையில் இதைவிட  வேறு சிறந்த தெரிவு எமக்கில்லை.

அண்மையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய இல்லவிளையாட்டுப் போட்டி கடந்த 7 வருடங்களின் பின் எமது கிராமத்து சகல பொதுமக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் ஒத்துழைப்புடன் இங்கு சிறப்பாக இடம்பெற்றது.

கடினப்பந்து திடல் அற்ற நாம் தேசிய அணிக்கு தெரிவாகக்கூடிய கடினப்பந்து வீச்சில்   மாகாண மட்டத்தில் 1ம் இடத்தையும் தேசியமட்டத்தில்3ம் இடத்தையும் பெற்ற  சாதனையை  தமதக்கிக்கொண்டோம்.


இன்னும் பல அழியாத விளையாட்டு பதிவுகளுடன் எமது வீரர்கள்.


எமது வளர்ச்சி எமது கையில்.
 வேற்றுமை அகன்று ஒற்றுமையுடன் சிறந்த ஒரு ஆரோக்கியமான  இளைஞர்  சமுதாயம் எம்மண்ணில் எழுச்சிபெற இணைவோம் நாம் ஒன்றாய்


தொடர்புகளுக்கு எமது FACEBOOK பக்கத்தை அணுகவும்

 
Top