இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு இளைஞர்களை உள்வாங்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட கடின வேகப்பந்து வீச்சாளர்களுக்கான மாகாண மட்ட தெரிவுச்சுற்றுப் போட்டியானது இன்று (2016.03.08) மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.இதில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட கிழக்குமாகாணத்தை சேர்ந்த 80 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றினர். அவர்களுள் எமது கிராமத்து இளைஞன் செல்வன். சிவபாலன் அரவிந்த்(சுவாட்டி விளையாட்டுக்கழக வீரர் ) அவர்கள் மாகாண மட்டத்தில்  முதன்மை வீரராக தெரிவாகி எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 

செல்வன். சிவபாலன் அரவிந்த் அவர்கள் சில நிமிடங்களை எம்முடன் ஒதுக்கியபோது " இன்றைய தெரிவில் தான் கிழக்குமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவாகியமை மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் உரிய முறையில் பயிற்சிகளை பெற எமது கிராமத்தில் ஓர் விளையாட்டு மைதானம் அற்றநிலையில் எமது அயல்கிராமமான பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தில் 1வார காலம் பெற்ற பயிற்சியின் துணையுடன்  இப் போட்டியில் பங்குபெற்றியதாகவும் .சிறந்த ஒரு விளையாட்டு மைதானம் எமது கிராமத்தில்  இருக்குமேயானால் இன்னும் உறுதியான பெறுபேற்றை வெளிக்காட்டிஇருக்க முடிவதோடு தன்னைவிடவும் சிறந்த பல வீரர்கள் இக் கிராமத்தில் உருவாகும் வாய்ப்புக்களும் ஏற்படும் எனவும்  . எதிர்வரும் 11ம்
திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள விசேட பயிற்சிக்கு தாம் அழைக்கப்பட்டிருப்பதாகவும், இத்தருணத்தில் தனது குடும்பத்திற்கும், தனது கழக வீரர்களுக்கும், தன்மீது நம்பிக்கை வைத்து இப் போட்டிக்கு வழியனுப்பி வைத்த அனைவருக்கும் குறிப்பாக திரு சி.விஸ்வராஜ்(விஷ்வா), திரு ரூபராஜ்(விளையாட்டு உத்தியோகஸ்தர்), திரு குகதாஸ் அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும். இறுதி தெரிவில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டி தேசிய அணிக்கு தெரிவாகுவது தனது இலக்காகும் என தெரிவித்தார்.

சிறந்த ஓர் விளையாட்டு மைதானம் எமக்கு  இருக்குமேயானால் பல அரவிந்த் எம்மத்தியில்...............


  

 
Top