அருள் மிகு ஸ்ரீ அம்பாறை வில்லானின் மாசிமக தீர்த்தோற்சவத்தின் 9ம் நாள் (03.03.2015)திருவிழாவான சப்பறத்திருவிழாவினை எமது கிராமத்தை சேர்ந்த அமரத்துவம் அடைந்த திருமதி கிருபைநாயகி  நடராஜா அவர்களின் நினைவாக கணவர் செ.நடராஜா பிள்ளைகளான சிவகுமாரன்,சதீஸ்குமார் ,சுரேஷ்குமார்,சுஜீவ்குமார் மற்றும் பேரன் சி.நிறேஸ் ஆகியோர் செய்து முடித்தனர். பிற்பகல் 6.30 மணியளவில் ஆரம்பமான பூசையை தொடர்ந்து எம்பெருமான் அலங்கரிக்கப்பட முத்துச்சப்பரத்தில் ஊர்வீதி வலம்வர வழி எங்கும் பக்த அடியார்கள் நிறைகுடங்களை வைத்து அம்பாரைவில்லானின் அருள்வேண்டி நின்றனர். இந்து மகளிர் மன்றத்தினரின் பக்தி கீதங்களுடன் பவனிவந்த எம்பெருமான் 11.30 மணியளவில் ஆலயத்தில் வந்தடைந்தார். 











 
Top