நேற்று (15.09.2014) பிற்பகல் 4 மணியளவில் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிரில் கோட்டைக்கல்லாறை சேர்ந்த நல்லையா நவரெட்ணம் அவர்கள் பாதையை கடக்க முயன்ற சமயம் கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு பயணித்த தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார். சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதி போக்குவரத்து பொலிசாரால் கைது செய்யபட்டு மேலதிகவிசாரனைகளை மேற்கொள்கின்றனர்.