எமது கிராமத்து  மத்தியில் பிரதான வீதியருகே அம்பாரை வில்லான்  அருகே அமர்ந்து வேண்டுவோர்க்கு  வேண்டும்  வரமருளும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனின்  வருடாந்த திருச்சடங்கு  எதிர்வரும் 13-06-2016 திங்கட்கிழமை  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 20-06-2016 திங்கட்கிழமை காலை சமுத்திர கும்பம் சொரிதலுடனும் திருக்கதவு அடைத்தலுடனும் இனிதே நிறைவுறவுள்ளது.


13-06-2016-    இரவு 7.00 மணிக்கு அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் பூசை,  இரவு 8.30 மணிக்கு  அம்பாள் ஆலய திருக்கதவு திறத்தல், நள்ளிரவு பூரண கும்பம் நிறுத்துதல் ,அதிகாலை 4.00 மணியளவில் பொதுமக்கள் சார்பில் திருச்சடங்கும் இடம்பெறும்


14-06-2016-   பிற்பகல் 4.00 மணியளவில் 2ம் வட்டார மக்களின்     திருச்சடங்கும்  இரவு அம்மன் ஊர் வீதி வருத்தலும்

15-06-2016-  பிற்பகல் 4.00மணியளவில் 3ம் வட்டார மக்களின் திருச்சடங்கு

16-06-2016-  பிற்பகல் 4.00மணியளவில் 4ம் வட்டார மக்களின் திருச்சடங்கும் இரவு அம்மன் ஊர் வீதி வருத்தலும்

17-06-2016-  பிற்பகல் 4.00மணியளவில் 5ம் வட்டார மக்களின் திருச்சடங்கு

18-06-2016- பிற்பகல் 4.00மணியளவில் 1ம் வட்டார மக்களின் திருச்சடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு பூரண கும்பம் நிறுத்தலும் ,தீக்குழி முட்டலும், தவநிலையும்

19-06-2016-அதிகாலை 5 மணிக்கு தீமிதிப்பு காலை 7 மணிக்கு நெற்தானிய காணிக்கை(மடிப்பிச்சை) இரவு 11.30 மணிக்கு 2ம் வட்டார மக்கள் சார்பில் திருக்குளிர்த்தி பாடுதல்

20-06-2016-  அதிகாலை 3 மணிக்கு அம்மன் ஊர்வீதி வலம்வந்து சமுத்திர கும்பம் சொரிதலும் வாழிபாடி அம்மன் திருக்கதவடைத்தலும்



தீமிதிப்பு 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை





 
Top