எழுதியவர்;-திருமதி.சுமதி பாலச்சந்தர், 
பிஜித்தீவு
„மலரும் முகம் பார்க்கும் காலம்'
திகைத்திடும் திமிராக, திக்கெட்டும் தீர்வாய்
அண்டம் நடுநடுங்க,நீ உன்
தாண்டவம் கொண்டதிங்கு
போதும் சிவனே
செயலாற்றும் காலமிது என்னோடு
நீ வந்திங்கு களமிறங்கு
யுத்தம் இல்லாத
அண்டம் செய்! இங்கு
ரத்தம் சிந்தாத பிண்டம் செய்
தாவரங்களே,பூமி வந்த
தேவதைகளெனச் சொல்! அவற்றை
காத்தலே மானிடத்தின் வாழ்வியல் எனச் சொல்
பெண்மை என்பதே
புனிதமெனச் சொல்! அதில்
கண்ணியம் கொள்வதே வளமை எனச் சொல்
வாழும் இடமே
சொர்க்கமெனச் சொல்! எவருக்கும்
உதவாத மனமே நரகமெனச் சொல்
பணம் என்பது
பண்டமெனச் சொல்! அதுவல்ல
பிராணன், என்பதையும் சொல் !
இனிதாக
இத்தனையும் செய்துவிடு
நிரந்தர மலர்ந்த முகம்
நுகர்ந்துவிடு !
 
Top