பன்னெடுங்கால வரலாற்றை கொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானின் அலங்கார உற்சவத்தின் 8ம் நாள் திருவிழாவான சப்பறத்திருவிழாவானது நேற்று(2015.03.18) ஆலயத்தில் இரவுப் பூசையினை தொடர்ந்து இடம்பெற்றது. சுமார் 9 மணியளவில் சுவாமி அலங்கரிக்கப்பட முத்துச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் புடை சூழ ஊர் வீதி வலம்வருகை தந்த காட்சி கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. அன்றைய தின பூசையினை அமரத்துவமடைந்த திரு.க.தர்மலிங்கம் அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் சிறப்பாக செய்து முடித்தனர். 











 
Top