கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த மாசிமக மகோற்சவ திருவிழாவானது இன்று காலை 9.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது,விநாயகர் வழிபாடு, கும்பபூஜை மற்றும் கிரியைகளுடன் கொடிச்சீலை ஏற்றப்பட்டது. கிரியைகள் யாவும் பிரதமகுரு சைவ சித்தாந்த செம்மல் ,கிரியா கலாமணி,கிரியா பூஷணம்,கிரியா திலகம் சிவத்திரு வேலு யோகராஜா குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய முதலாம் நாள் பகல் பூசையினை நாகலிங்கம் வைரமணி குடும்பத்தினரும் இரவு பூஜை கோட்டைக்கல்லாறு பொதுமக்கள் சார்பாகவும் இடம்பெறவுள்ளது.